கால்பந்து உற்சாகத்தில் குப்பையான ‘டத்தாரான் மெர்டேக்கா’! அமைச்சர் ஹன்னா யோ வருத்தம்
- Shan Siva
- 20 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 20: இன்று அதிகாலையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த பிறகு, டத்தாரான் மெர்டேக்கா முழுவதும் குப்பைகளைக் கொட்டிச் சென்ற கால்பந்து ரசிகர்களை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ கடுமையாகச் சாடியுள்ளார்.
குப்பைகளை அகற்ற
உதவியதற்காக கோலாலம்பூர் நகராண்மைக்கழகமான DBKL-க்கு யோ நன்றி
தெரிவித்ததோடு, குப்பைகளைத்
தரையில் கொட்டுவதற்குப் பதிலாக குப்பைத் தொட்டியில் போடுவது அனைத்து
மலேசியர்களுக்கும் ஒரு அடிப்படை நாகரிகமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
டத்தாரான் மெர்டேக்கா
என்பது நிகழ்வுகளுக்கான ஓர் இடம் மட்டுமல்ல, அது தலைநகரின் கண்ணியத்தைப் பிரதிபலிக்கும் மலேசியாவின்
வரலாற்றின் ஓர் இன்றியமையாத பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் அன்வர்
இப்ராஹிம் அடிக்கடி வலியுறுத்துவது போல, முன்னேற்றம் என்பது வெறும் பௌதீக வளர்ச்சியால் மட்டும் அளவிடப்படுவதில்லை,
மாறாகப் பொது இடங்களை மதித்து, அவற்றைப் பாதுகாப்பதில் நமது அணுகுமுறையாலும்
அளவிடப்படுகிறது.
உலகக் கோப்பை
இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பைக் காண 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் டத்தாரான் மெர்டேக்காவிற்குத்
திரண்டனர்; இது ஒரு திறந்தவெளித்
திரையில் காட்டப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



