தம்பின் ரோட்டரி கிளப் ஆதரவில் ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம்!

- Muthu Kumar
- 04 Jan, 2025
(வீ.இராஜேந்திரன்)
கெமெஞ்சே, 4-
அண்மையில் தம்பின் ரோட்டரி கிளப் ஆதரவில் ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வெ.2 ஆயிரம் மதிப்பிலான நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
தம்பின் ரோட்டரி கிளப் தலைவர் சின் ந சிம் குழுவினர் பள்ளிக்கு நேரடியாக வருகை தந்து நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினர். இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு உதவியாக இருக்குமென பள்ளியின் தலைமையாசிரியர் மா.கணேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இவ்வேளையில் பள்ளிக்கு உதவிய தம்பின் ரோட்டரி கிளப் தலைவர் சின் ந சிம் குழுவினருக்கு தலைமையாசிரியர் மா.கணேசன் நன்றி கூறி நினைவுப் பரிசு வழங்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *