இரண்டு இடைத்தேர்தல்களுக்கான தேதி விரைவில் அறிவிப்பு - கைருல் ஷாரில் இட்ரஸ்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,டிச 10:

நாடளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினருமாகவும் இருந்த புங் மொக்தார் ராடின் இறந்ததைத் தொடர்ந்து கினாபத்தாங்கன் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களுக்கான முக்கிய தேதிகளை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் டிசம்பர் 18 ஆம் தேதி கூடும் எனத் தெரிவித்துள்ளது.

எதிர்பாராத காலியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல் மற்றும் சபா மாநில சட்டமன்றத் தலைவர் கட்ஸிம் யஹ்யா ஆகியோரிடமிருந்து ஆணையம் பெற்றதாக தேர்தல் ஆணைய செயலாளர் கைருல் ஷாரில் இட்ரஸ் ஒரு அறிக்கையில் கூறினார்.

காலியிடங்கள் உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து நாட்களுக்குள் இடங்களை நிரப்ப வேண்டும் என்று கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 54 (1)மற்றும் சபா மாநில அரசியலமைப்பின் பிரிவு 21 (5)ஆகியவற்றின் படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக அவர் கூறினார்.

டிசம்பர் 18 அன்று தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் தலைமையில் நடைபெறும் கூட்டம் தேர்தல் ஆணையம் வெளியிடுதல், வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் மற்றும் வாக்குப்பதிவு நாள் போன்ற முக்கியமான தேதிகளை இறுதி செய்யும். பயன்படுத்த வேண்டிய வாக்காளர் பட்டியல் மற்றும் இரண்டு இடைத்தேர்தல்களுக்கும் தேவையான தளவாட தயாரிப்புகள் குறித்தும் முடிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *