12 வயது முதல் 18 வயது வரை மகளை நாசம் செய்த தந்தை! கர்ப்பமான சூழலில் பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 25: தனது 17 வயது மகளை, அவரது 12 வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நபர் மீது இன்று புத்ராஜெயா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதை ஒரு மருத்துவ அதிகாரி கண்டறிந்ததை அடுத்து, ஜூன் 18 அன்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் கூறினார்.

தனக்கு 12 வயதிலிருந்தே தனது தந்தை தன்னை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக அவர் தெரிவித்தார்.

46 வயதான சந்தேக நபர் ஜூன் 19 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது இன்று  குற்றம் சாட்டப்படும்என்று சினார் ஹரியான் பத்திரிகை அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

வேலையில்லாத அந்த நபர் மீது, முறையற்ற பாலியல் வன்கொடுமைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(3)-ன் கீழ் குற்றம் சாட்டப்படும் என்றும், குற்ற நிரூபணத்தின் பேரில் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும் என்றும் ஃபாடில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *