15 வயது மகளைக் கற்பழித்த தந்தை கைது!
- Shan Siva
- 22 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 22: திரெங்கானுவில்
உள்ள செத்தியூவில் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்
விசாரணைகளுக்கு உதவுவதற்காக கடந்த சனிக்கிழமை பாதிக்கப்பட்டவரின் தந்தையை போலீஸார்
கைது செய்தனர்.
ஜூன் 15 அன்று மாலை 3.54 மணிக்கு 15 வயது சிறுமி
அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து 50 வயதுடைய நபர் மாலை 6 மணியளவில் கைது
செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் Zahril Asri Zain தெரிவித்தார்.
அறிக்கையின்படி,
பாதிக்கப்பட்ட பெண் தனது இளைய சகோதரியுடன்
வீட்டில் இருந்தபோது, மே 29 அன்று மதியம் 12 மணியளவில் அவரது தந்தை அச்சிறுமியைத் தனது படுக்கையறைக்கு
அழைத்ததாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட
பெண்ணை தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதைப் பற்றி
யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அச்சிறுமியை தந்தை எச்சரித்துள்ளதாகவும் Zahril
Asri Zain தெரிவித்தார்.
மேலும், இது முதல் முறையல்ல, ஏனெனில் அந்த நபர் ஆறு வயதிலிருந்தே இச்செயலில் ஈடுபட்டதாகக்
கூறப்படுகிறது, இதனால்
மனச்சோர்வுக்கு அச்சிறுமி உள்ளாகியிருப்பதாக அவர் கூறினார்.
இதனை அடுத்து, பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 376(3)
பிரிவின் கீழ், செத்தியூ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த நபரை ஏழு நாள்
காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



