அப்பாவுக்கு எலும்பு முறிவு! தீவிரமான காயம்தான்! - மகாதீர் மகள் மரினா விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 7: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது என்றும், ஆனால் உயிருக்கு ஆபத்தானது அல்ல எனவும் மகாதீரி மகள் டத்தோ படுக்கா மரினா மகாதீர் தெரிவித்துள்ளார்.

நேற்று தேசிய இருதய கழகமான(IJN) வளாகத்தில் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "இது தீவிரமான காயம்தான், ஆனால் ஆபத்தானது இல்லை. அவரது வயதை கருத்தில் கொண்டால் எல்லாமே ஒப்பீட்டுக்குரியதே. அவர் நன்றாகவே இருக்கிறார், என்று கூறினார்.

மேலும், “இதுகுறித்து விரிவான அறிக்கையை பின்னர் வெளியிடுவோம்" என்றும் மரினா தெரிவித்தார்.

துன் டாக்டர் மகாதீர், தமது இல்லத்தில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் IJN மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர், துன் மகாதீர் 2025 ஜூலை 13ஆம் தேதி சோர்வு காரணமாக IJN-ல் சிகிச்சை பெற்றார். அதே நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *