தேசிய பாடகி சித்தி நூர்ஹலிசா விபத்தில் சிக்கினார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 17: தேசியப் பாடகி சித்தி நூர்ஹலிசா தருதின் நேற்று மாஜு விரைவுச்சாலையில் (MEX) ஒரு விபத்தில் சிக்கினார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சித்தி தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார், ஆனால் விபத்து குறித்த எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை.

அவரது மேலாளர் ரோஸி அப்துல் ரசாக், சித்தியின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.

சித்தியை ஏற்றிச் சென்ற வாகனம் உட்பட, இந்த விபத்தில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் கூறினார்.

சிப்பாங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடிவிட்டு,  வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தவிபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *