அட்லெடிகோ 2-0 வெற்றி: பத்து வீரர்களுடன் போராடிய பார்சிலோனா தோல்வி
- Surendran Sumdraraj
- 09 Apr, 2026
பார்சிலோனா, ஏப். 9-
Atletico Madrid அணி, Barcelona மீது 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, UEFA Champions League காலிறுதி முதல் சுற்றில் முன்னிலை பெற்றது.
Diego Simeone பயிற்சியளிக்கும் அட்லெடிகோ, போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பார்சிலோனா பாதுகாப்பு வீரர் Pau Cubarsi மீது சிவப்பு அட்டை காட்டப்பட்டதையடுத்து, ஒரு வீரர் அதிகம் என்ற முன்னிலைப் பெற்றது. கியுலியானோ சிமியோனே மீது கடுமையான தாக்குதல் நடத்தியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது.
முதல் பாதி கூடுதல் நேரத்தில், Julian Alvarez தூரத்திலிருந்து அசத்தலான பிரீகிக் மூலம் அட்லெடிகோவுக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார். இதனால் காம்ப் நௌவில் கூடியிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பத்து வீரர்களுடன் விளையாடிய Barcelona அணி, இரண்டாம் பாதியில் மீண்டு வர முயன்றாலும், அட்லெடிகோவின் கட்டுப்பாடான பாதுகாப்பையும் வேகமான எதிர்தாக்குதல்களையும் உடைக்க முடியாமல் போனது.
இந்த வெற்றியால், அட்லெடிகோ மாட்ரிட் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



