ஈரான் முன்னாள் அதிபர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் மாட் சாபு பங்கேற்கிறார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 2: ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு நாளை தெஹ்ரானில் நடைபெற உள்ளது. இதில் மலேசியா சார்பில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு கலந்துகொள்வார் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற 39வது ஆசிய-பசிபிக் வட்டமேசை மாநாட்டில் பேசிய அன்வார், இதனைத் தெரிவித்தார். இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனது பணியின் காரணமாக தம்மால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர கூறினார்.

நாளை தெஹ்ரானில் நடைபெறும் கமேனியின் இறுதிச் சடங்கில், நாட்டின் சார்பில் மாட் சாபு கலந்துகொள்வார் என அவர் தெரிவித்தார்.

86 வயதான கமேனி, கடந்த  பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்பு, கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தபா பதவியேற்றார்.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கும் மேலாகத் தாமதமான இந்த இறுதிச் சடங்கு, ஜூலை 3 முதல் 9 வரை தெஹ்ரான், கோம் மற்றும் மஷாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. மேலும், நாளை தெஹ்ரானில் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கான விழாவும் திட்டமிடப்பட்டுள்ளது.

30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *