வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் – அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 07 Sep, 2026
தெஹ்ரான், செப். 7 –
மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு சொந்தமான மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அடுத்த தாக்குதலுக்கு மிகவும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு அருகே பெர்ஷியன் வளைகுடாவில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது நான்கு ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கின. இதில் கப்பல் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது. எனினும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மேலும், ஜாஸ்க் அருகே மற்றொரு எண்ணெய் கப்பலும், ஓமன் வளைகுடாவில் பயணித்த மூன்றாவது கப்பலும் ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டன. முதல் இரண்டு கப்பல்களில் எண்ணெய் இருந்ததாகவும், மூன்றாவது கப்பல் காலியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்களை ஈரான் படைகள் குறிவைத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



