ஆஸ்திரேலியாவுக்கு மலேசியா எண்ணெய் விற்கிறதா? அன்வார் மறுப்பு!
- THINAGAREN SANGGAREN
- 17 Apr, 2026
ஏப்ரல் 17,
நேற்று ஆஸ்திரேலியா பிரதமரும் மலேசிய பிரதமரும் அதிகாரப்பூர்வமாகச் சந்திப்பை நடத்தியிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மலேசியா அதன் எரிவாயுவை வழங்கி ஆதரவளிப்பதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அன்வார் இன்று விளக்கமளித்தார். தற்போதைய சூழலில் மலேசியா எந்தவொரு நாட்டிற்கும் எரிவாயுவை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என்றும் தனியார் நிறுவனங்களின் எரிவாயு வணிகத்தையும் அரசு கண்காணித்து வருவதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
தற்போது மலேசிய மக்களுக்குத் தேவையான எரிவாயுவை வழங்குவதில் அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் எரிவாயு தட்டுப்பாடுகளை மலேசிய அரசு திறம்பட கையாளும் என்றும் அன்வார் நம்பிக்கை அளித்தார். மேலும் இது போன்ற தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அண்டை நாடுகளுடனான அதிகாரப்பூர்வச் சந்திப்பாக மட்டுமே நேற்று ஆஸ்திரேலியா பிரதமரைச் சந்தித்ததாகப் பிரதமர் அன்வார் தெளிவுப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



