UTeM நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் துணை போலீஸ் தலைவர் அயோப் கான் நியமனம்
- Surendran Sumdraraj
- 22 Sep, 2026
மலாக்கா, செப். 22-
மலேசியாவின் முன்னாள் துணை போலீஸ் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, மலாக்கா மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTeM) நிர்வாகக் குழுத் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் செப்டம்பர் 16, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிரின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டதாக UTeM தெரிவித்துள்ளது. பதவிக்காலம் நிறைவடைந்த டத்தோ ஹுசைனி ஓமாருக்கு பதிலாக அயோப் கான் பொறுப்பேற்றுள்ளார்.
நாட்டின் முக்கிய அமலாக்கத் துறைகளில் உயர்மட்ட தலைமை மற்றும் நிர்வாக அனுபவம் பெற்றுள்ள அயோப் கானின் அனுபவம், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவை மேலும் வலுப்படுத்தும் என UTeM நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



