கஜகஸ்தான் விமான விபத்து! - மலேசியர்கள் யாரும் சிக்கவில்லை...

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, டிச 26 :  கஜகஸ்தானின் அக்டாவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஜே2-8243 என்ற எம்ப்ரேயர் 190 விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சிக்கவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

விஸ்மா புத்ரா இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருபதாக ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உதவி அல்லது மேலும் தகவலுக்கு,  அஸ்தானாவில் உள்ள மலேசிய தூதரகத்தை (26 சரய்ஷிக் தெரு, தூதரக மாவட்டம், 010000 அஸ்தானா, கஜகஸ்தான்) +7 (7172) 79 06 90, +7 (7172) 79 06 95 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது  +7 777 079 0014, அல்லது மின்னஞ்சல் மூலம்  [email protected]. நாடலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *