வாய்ப்பு இருந்தால் லஞ்சம் வாங்கும் சமூகமாக மாறிவிட்டோம்! அசாம் பாக்கி!
- THINAGAREN SANGGAREN
- 08 Apr, 2026
ஏப்ரல் 8,
ஊழல் வாங்குவதையும் கொடுப்பதையும் சாதாரணமாக நாம் கடந்துவிட்டதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் மனப்பான்மையை இயல்பாக எடுத்துக் கொள்ள கூடாது என்றாலும் வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது நாட்டைப் பலவீனமாக்கும் என Tan Sri Azam Baki தெரிவித்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு தேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் 30% மாணவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் லஞ்சம் வாங்க தயாராக இருப்பதாகத் தெரிய வந்தது. அப்போதிலிருந்து லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் இளைஞர்களிடையே ஊழல் குறித்தான விழிப்புணர்வுகளை மேற்கொண்டதால் 2016 ஆம் ஆண்டு அது 16% விழுக்காடாகக் குறைந்ததை Tan Sri Azam Baki சுட்டிக்காட்டினார்.
அரசியல்வாதிகள், தலைமையில் இருக்கும் அதிகாரிகளை விடவும் அமலாக்க நடவடிக்கைகளில் இருக்கும் அதிகாரிகள் பெறும் லஞ்சம் நேரடியாக மக்களைப் பாதிக்கும் என Tan Sri Azam Baki தெரிவித்தார். நாடு முதிர்ச்சியடைகிறதா இல்லையா என்பது ஊழலின் அளவீட்டைக் கொண்டு நாம் அளவிடலாம் என Tan Sri Azam Baki தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



