அசாம் பாக்கியை விசாரிக்க வேண்டும்! 51 பொது இயக்கங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 01 Jul, 2026
ஜுலை 1,
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் Tan Sri Azam Bakiக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள RCI அமைக்கப்பட வேண்டும் என பி.கே.ஆரின் Pasir Gudang நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Karim, Subang நாடாளுமன்ற உறுப்பினர் Wong Chen, Sungai Siput நாடாளுமன்ற உறுப்பினர் S Kesavan, Ampang நாடாளுமன்ற உறுப்பினர் Rodziah Ismail, Petaling Jaya நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chung ஆகியோர் நாடாளுமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். KORPORAT MAFIA ஊழலுடன் Tan Sri Azam Bakiக்குத் தொடர்பு இருப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் தனி விசாரணை ஆணையம் அமைக்காமல் மடானி அரசு தாமதம் செய்வதால் முக்கிய ஊழல்வாதிகள் சாட்சிகளை அழிக்க முயற்சிப்பார்கள் என Subang நாடாளுமன்ற உறுப்பினர் Wong Chen தெரிவித்தார்.
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் Tan Sri Azam Bakiக்கு எதிராக 51 பொது இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை முன் வைத்திருப்பதாகவும் ஜொகூர் நெகிரி செம்பிலான தேர்தல்களில் KORPORAT MAFIA ஊழல் விவகாரங்கள் பக்காத்தானுக்குப் பலவீனத்தை ஏற்படுத்தும் என பி.கே.ஆரின் Subang நாடாளுமன்ற உறுப்பினர் Wong Chen வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



