பங்களாதேஷ் இந்துக்களைக் காப்பாற்றுங்கள்! பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கோரிக்கை!
- Thinagaren Sanggaren
- 29 Dec, 2025
டிசம்பர் 29,
பங்களதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் வலியுறுத்தியது. பினாங்கில் அமைந்துள்ள 30 இந்து மத இயக்கங்களுடன் ஒன்றிணைந்து பினாங்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்தில் தங்களின் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர். 3 கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவைப் பங்களாதேஷின் தூதரான Dato’ Shaik Ismail Allaudin பெற்றுக் கொண்டார்.
பங்களாதேஷின் சிறுபான்மையினரான இந்து சமூகத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து முழு விசாரணை வேண்டும் என்றும் மனித உரிமையை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இருக்க பங்களாதேஷ் அரசு உறுதியளிக்க வேண்டும் என்றும் உலக நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்படும் போது மலேசியாவின் இந்துக்கள் வலுவான எதிர்ப்பை நம் இந்துக்கள் பதிவு செய்ய வேண்டும் என பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் வலியுறுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



