ஏழு மாநிலங்களில் 449 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்
- Tamil Malar (Reporter)
- 15 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 15-
மலேசியாவில் ஏழு மாநிலங்களில் இன்னும் துயர் துடைப்பு மையங்கள் (PPS) செயல்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 157 குடும்பங்களைச் சேர்ந்த 449 வெள்ள மக்கள் இந்த மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திரங்கானு, சரவாக், கிளந்தான், சிலாங்கூர், சபா, பகாங், பேராக் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 14 தங்க வைப்பு மையங்கள் செயல்படுகின்றன.
ஹுலு திரங்கானு மாவட்டத்தில் நான்கு மையங்களும், கெமாமான் மாவட்டத்தில் ஒரு மையமும் என மொத்தம் ஐந்து PPS திறக்கப்பட்டுள்ளன. இவை 42 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேரைத் தங்க வைத்துள்ளன.
சரவாக்கில் மிரி பகுதியில் இரண்டு மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தங்கியுள்ளனர்.
மற்ற மாநிலங்களில் உள்ள மையங்களில் மீதமுள்ள வெள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொன்சூன் காலத்தில் ஏற்படும் தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்படுவது வழக்கம். அரசு, தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கி வருகின்றன.
வெள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், சில மையங்கள் மூடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



