சபாவில் வெள்ளம் தீவிரம்: 6,457 பேர் தற்காலிக மையங்களில் தங்கினர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,பிப். 27-

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பில் சபா மாநிலமே அதிகமான பாதிப்பை பதிவு செய்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, சபாவில் 6,457 பேர் 2,432 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 40 தற்காலிக தங்குமிட மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத் துறையின் ‘இன்போபென்சானா’ இணையத் தளத்தின் தகவலின்படி, மொத்தமாக நான்கு மாநிலங்களில் 44 தற்காலிக தங்குமிட மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 2,509 குடும்பங்களைச் சேர்ந்த 6,690 பேர் தங்கியுள்ளனர்.

சபாவில் கடந்த புதன்கிழமை முதல் தங்குமிட மையங்கள் திறக்கப்பட்டன. அங்கு ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக சபா மாறியுள்ளது.

இதேவேளை, ஜொகூர் மாநிலத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி திறக்கப்பட்ட இரண்டு தற்காலிக மையங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. அங்கு இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 49 குடும்பங்களிலிருந்து 176 பேர் தங்கியுள்ளனர்.

வெள்ளநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *