8 மாவட்டங்களில் 8,838 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

top-news

நவம்பர் 27, 

கிளாந்தானில் கடந்த 2 நாள்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 8,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு வரையில்  1,352 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 மணி வரையில் மொத்தம் 8,838 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிளாந்தான் சமூகநலத்துறை (JKM) தெரிவித்துள்ளது.

Kota Bharu மாவட்டத்தில் 1,561 பேரும், Pasir Puteh பகுதியில் 1,386 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கிளாந்தானின் முக்கிய பகுதிகளான Kota Bharu, Pasir Puteh மிகுந்த சேதத்திற்குள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 39 வெள்ளப் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் 2,396 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasir Mas, Kuala Krai, Jeli, Machang, Tanah Merah, Pasir Puteh, Kota Bharu, Bachok என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலையும் கிளாந்தான் சமூகநலத்துறை (JKM) வெளியிட்டுள்ளது.

Mangsa banjir di Kelantan meningkat kepada 8,838 orang setakat 2.43 petang, melibatkan sembilan daerah. Pasir Mas merekodkan jumlah tertinggi dengan 1,634 mangsa. Pekan Rantau Panjang hampir lumpuh apabila laluan utamanya hanya dapat dilalui kenderaan berat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *