12 மணிநேரத்தில் 10,000 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

top-news

ஜனவரி 31,

சரவாக்கில் ஏற்பட்டுள்ள கடும்வெள்ளத்தால் கடந்த 12 மணிநேரத்தில் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இயற்கை பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இன்று வரையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் 2,767 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் 57 வெள்ள நிவாரண மையங்களில் 9,780 பேர் தங்க வைக்கப்பட்டுளளர். 

சரவாக்கின் பல்வேறு பகுதிகளில் மீட்புப் படை அதிகாரிகளுடன் காவல் துறையும் ராணுவமும் பாதுகாப்புப் படையும் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வரும் நிலையில் பொதுமக்கள் வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க வீடுகளின் கூரைகளில் காத்திருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீனவர்களின் படகுகளும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lebih 10,000 penduduk di Sarawak terjejas akibat banjir dalam tempoh 12 jam. Seramai 9,780 mangsa dari 2,767 keluarga dipindahkan ke 57 pusat pemindahan. Pasukan penyelamat bersama polis dan tentera giat menjalankan operasi termasuk menggunakan bot nelayan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *