வெள்ளத்தில் உதவிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி!
- Sangeetha K Loganathan
- 27 Nov, 2024
நவம்பர் 27
நேற்றிரவு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 33 வயது Mohd Zakaria Tuan Ismail எனும் இளைஞர் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார். அதிகாலை 4.55 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாக Pasir Puteh மாவட்ட மீட்பு ஆணையர் Mohd Rukiman Ab Rahman தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட 33 வயது இளைஞர் கடந்த 2 நாள்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தன்னார்வளராக இணைந்து சேவையாற்றிய நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் தனது குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்களை மீட்கும் போது அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாலை 5.30 மணிக்கு மின்கம்பத்தில் சிக்கியிருந்த அவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மின்கம்பத்தின் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக Mohd Rukiman தெரிவித்தார்.
Seorang lelaki pembantu SAR maut akibat terkena renjatan elektrik selepas kediamannya di Kampung Banir Belikong, Pasir Puteh dinaiki air dalam kejadian banjir
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



