கெடாவில் 6104 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்! 1947 குடும்பங்கள் வீடுகளை இழந்தனர்!
- Thinagaren Sanggaren
- 20 Sep, 2024
கெடாவில் தொடர் மழையின் காரணமாக அதிகமானப்
பகுதிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் இதுவரை மொத்தம் 6104 பேர் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1947 குடும்பங்கள் தங்களின் உடமைகளையும் வீடுகளை இழந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பதற்காக
38 தற்காலிகப் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை
2184. பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2,332. பாதிக்கப்பட்ட
சிறுவர்களின் எண்ணிக்கை 1472, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை
113, பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 1125 என அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட பகுதிகளும் பாதிகப்பட்டவர்களின்
எண்ணிக்கையும்
Kubang Pasu (1,540 பேர்)
Pokok Sena (932 பேர்)
Pendang (806 பேர்)
Kuala Muda (184 பேர்)
Bandar Baharu (137 பேர்)
Kulim (80 பேர்)
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



