30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கான அரசு உதவிகள் தொடரும்: ஹன்னா இயோ
- Tamil Malar (Reporter)
- 01 Dec, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், டிச. 1-
இளைஞர் அமைப்புகளின் உறுப்பினர் வயது வரம்பு வரும் ஜனவரி 1 முதல் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகக் குறைக்கப்பட்டாலும், 30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கான அரசு உதவிகளும் திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்படும் என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ உறுதியளித்துள்ளார்.
புதிய வயது வரம்பு அமலுக்கு வந்த பிறகும், 30 வயதைத் தாண்டிய இளைஞர்கள் பலர் இன்னும் அரசின் உதவி. ஆதரவை நாடுவதாக மலேசிய இளைஞர் கவுன்சில் அமைச்சகத்திற்குத் தெரிவித்ததையடுத்து, இக்கொள்கை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 28 அன்று அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தில், இளைஞர் வயது வரம்பு குறைப்புக்குப் பிறகும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அரசு உதவிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஹன்னா யோ தெரிவித்தார்.
“இளைஞர் என்ற வரையறை மாறினாலும், தேவைப்படும் அனைவருக்கும் அரசு உதவி நிறுத்தப்படாது. கல்வி, திறன் பயிற்சி, தொழில்முனைவு உதவி போன்ற திட்டங்கள் 30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும்” என்று அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



