புதிய ஐ.பி.டி.ஏ. மாணவர்களுக்கு விமான டிக்கெட் வாங்க RM500 சிறப்பு உதவி
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
கோலாலம்பூர், செப். 17-
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத சேர்க்கைக்குத் தகுதி பெற்ற புதிய அரசு உயர்கல்வி நிறுவன (IPTA) மாணவர்களுக்கு உள்நாட்டு விமான டிக்கெட் வாங்குவதற்காக ஒருமுறை RM500 சிறப்பு உதவி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்கள் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை குறைப்பதுடன், தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த உதவி அரசு பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதிதாக சேரும் தகுதியான மாணவர்களை உள்ளடக்கும். தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் மற்றும் லாபுவான் இடையே விமானப் பயணம் மேற்கொண்டு கல்வியைத் தொடங்க வேண்டிய 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
2026 மலேசிய தின தேசிய கொண்டாட்டத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்த அன்வார், பின்னர் சமூக ஊடகப் பதிவிலும் இதனை குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



