100,000 மாணவர்களுக்குத் தலா RM 150 கல்வி நிதி! – கல்வி அமைச்சர்
- Sangeetha K Loganathan
- 22 Dec, 2024
டிசம்பர் 22,
பள்ளிக் காலாண்டுத் தொடக்கத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் RM 150 உதவி நிதி ஆறாம் படிவம் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். ஆண்டு 1 முதல் படிவம் 5 வரையில் வழங்கப்பட்ட இந்த நிதி இனி படிவம் 6 மாணவர்களுக்கும் வழங்கப்படுவதால் 100,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என Fadhlina Sidek தெரிவித்தார். பள்ளிக் காலாண்டுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த நிதி கிடைக்க பெறும் வகையில் பெற்றோர்களுக்கும் கல்வி செலவுகளுக்கானச் சுமை குறையும் என அவர் தெரிவித்தார்.
BAP எனும் இத்திட்டம் படிவம் 6 மாணவர்கள் பிப்பரவரியில் பெறுவார்கள் என்றும், அதன் அடுத்த தவணை மாணவர்கள் ஜூலையில் பெறுவார்கள் அவர் தெரிவித்தார்.
Bantuan Awal Persekolahan (BAP) RM150 diperluaskan kepada pelajar Tingkatan Enam mulai sesi 2025/2026, memberi manfaat kepada lebih 100,000 pelajar dengan kos sekitar RM15 juta. Agihan BAP dijangka pada Februari dan Julai 2025.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



