அறிவாளால் வெட்டியதாக குற்றச்சாட்டு: நண்பருக்கு கடும் காயம் ஏற்படுத்திய ஆடவர் மீது வழக்கு
- Surendran Sumdraraj
- 04 Jun, 2026
பட்டர்வொர்த், ஜூன் 4 –
நண்பருக்கு அறிவாளால் தாக்கி கடுமையான காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 41 வயதுடைய ஆடவர் ஒருவர் இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜே. தனபாலன் என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர், நீதிபதி ஊய் ஷியோ யியன் முன்னிலையில் குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அவர் மீது மலேசிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.
கடந்த மே 25-ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் அம்பாங் ஜாஜார் அடுக்குமாடிக் குடியிருப்பின் சி தொகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. 29 வயதுடைய தனது அறிமுக நபரை சுமார் 70 சென்டிமீட்டர் நீளமுள்ள அறிவாளால் தாக்கி கடுமையான காயம் ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் நிரந்தர உடல் ஊனத்திற்கு ஆளாகக்கூடும் என அச்சம் நிலவுவதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்குப் பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கின் அரசுத் தரப்பு விசாரணையை துணை அரசு வழக்கறிஞர் லிம் ஜான் யி முன்னெடுத்தார். குற்றஞ்சாட்டப்பட்ட தனபாலன் சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இவ்வழக்கின் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றம் அடுத்த விசாரணை தேதியை நிர்ணயித்துள்ளது. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



