RM72,767 மதிப்புள்ள போலியானப் பொருள்கள் பறிமுதல்– KPDN KEDAH

top-news

பிப்ரவரி 11,

கெடா மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் RM72,767 மதிப்பிலானப் போலி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லங்காவியில் அதிகமானச் சுற்றுப்பயணிகள் இடங்களில் வணிகம் செய்யும் வணிகர்கள் போலி முத்திரைகள் கொண்டிருக்கும் பொருள்களை விற்பனை செய்வதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக KEDAH KPDN இயக்குநர் Muhammad Nizam Jamaludin தெரிவித்தார். 

வெளிநாட்டு நிறுவனங்களின் பிரபலமான முத்திரைகளைக் கொண்ட 2,020 பொருள்களைப் பறிமுதல் செய்ததாகவும் அதன் மதிப்பு RM72,767 என்றும் KEDAH KPDN இயக்குநர் Muhammad Nizam Jamaludin தெரிவித்தார். பிரபல நிறுவனங்களின் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து அதனைத் தரமானப் பொருள்கள் என வாடிக்கையாளர்களை நம்ப வைத்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

KPDN Kedah merampas barangan tiruan bernilai RM72,767 dalam operasi di Langkawi. Sebanyak 2,020 barang berjenama palsu ditemui dijual kepada pelancong. Siasatan mendapati peniaga menggunakan cap dagangan terkenal secara tidak sah untuk mengelirukan pelanggan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *