அமைச்சர்கள் நியமனம் அன்வாரின் தனிப்பட்ட உரிமை! - Zahid Hamidi
- THINAGAREN SANGGAREN
- 23 Jul, 2026
ஜூலை 23,
அமைச்சர்களை நியமிப்பது பிரதமர் , Datuk Seri Anwar Ibrahim மட்டுமே எடுக்கும் தனிப்பட்ட முடிவு என்பதால் வேலை செய்யாத, தகுதி இல்லாத பாரிசான் அமைச்சர்களைப் பிரதமர் தாராளமாக நீக்கம் செய்யலாம் என்கிற எண்ணத்திலேயே தாம் கருத்து தெரிவித்ததாக துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi விளக்கமளித்தார். பாரிசான் அமைச்சர்கள் தங்களுடைய அமைச்சர் பொறுப்பில் முறையாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் தாராளமாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கலாம் என Datuk Seri Ahmad Zahid Hamidi முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
நான் சொன்னதைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம் என்றும் அரசியல் நிலைப்பாடுகளால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். அமைச்சரின் தகுதி, அவர் அமைச்சராக எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே அவர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்படும் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். தேர்தலில் பக்காத்தானும் பாரிசானும் எதிர் எதிர் நிலையில் போட்டியிடுவது தேசிய அரசுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதில் பக்காத்தான் தலைவர்களும் பாரிசான் தலைவர்களும் உறுதியுடன் இருக்கிறோம் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



