பாரிசான் + பெரிக்காத்தான் கூட்டணி! காலத்தின் அவசியம்! ம.சீ.ச சம்மதம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 19,

நெகிரி செம்பிலான் தேர்தலில் பாரிசானும் பெரிக்காத்தானும் இணைந்திருப்பது குறித்து சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம் என ம.சீ.ச கட்சியின் தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong தெரிவித்தார். இது கூட்டணி கிடையாது. தேர்தல் புரிந்துணர்வு மட்டுமே என Datuk Seri Dr Wee Ka Siong தெரிவித்தார். வாக்குகள் சிதறுவதால் தேர்தலில் நியாயமான வெற்றியை எந்தவொரு கட்சியும் பெற முடியாது. பன்முனை போட்டிகளால், வாக்குகள் சிதறாமல் இருக்கவே பெரிக்காத்தானும் பாரிசானும் புரிந்துணர்வின் அடிப்படையில் நெகிரி செம்பிலான் தேர்தலை எதிர்நோக்குவதாக ம.சீ.ச தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong விளக்கமளித்தார். 

இப்போது மக்களுக்கு உண்மையான தேவை அவர்களுடைய வாழ்வாதாரம். அரசியல் கட்சிகளுக்கிடையிலான போட்டிகளும் வாக்குவாதங்களும் நீண்டுக் கொண்டே இருந்தால் அது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் இரு பெரும் கட்சிகளின் இணக்கமான உறவைக் கடைப்பிடிக்கிறது என Datuk Seri Dr Wee Ka Siong வலியுறுத்தினார். அரசியல் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வால் இணக்கமான அரசியலும் மக்கள் நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்கும் ஆதரவும் பெறுகும் என்றும். இது காலத்தின் தேவை என்பதால் இந்த புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் ம.சீ.ச தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *