பாரிசானில் புதிய கட்சி இணைவதால் ம.இ.காவுக்குப் பாதிப்பு இல்லை! – ZAHID உறுதி!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 19,

பாரிசான் கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பதால் ம.இ.காவுக்கு அசெளகரியம் ஏற்படாது என பாரிசான் கூட்டணித் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பாரிசானில் அம்னோ, ம.இ.கா, ம.சீ.ச ஆகிய 3 கட்சிகள் மட்டுமே கூட்டணிக் கட்சிகளாக இருக்க முடியும். இதுவரையில் மற்ற கட்சிகள் பாரிசானின் தோழமைக் கட்சிகளாக இருந்து வந்தனர் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். ஆனால் இப்போது தோழமை கட்சிகளாக இருக்கும் IPF, KIMMA, MAKKAL SAKTHI ஆகிய கட்சிகளைக் கூட்டணிக் கட்சிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றால் பாரிசான் கூட்டணியின் சட்ட விதிகளை மாற்றம் செய்ய வேண்டும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

பாரிசானின் சட்ட விதிகளை மாற்றம் செய்ய சிறிது காலம் எடுக்கும் என்பதால் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் இந்த கூட்டணிக்கான ஒப்பந்தம் முழுமை பெறும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் PPP கட்சி பாரிசான் கூட்டணியின் தோழமைக் கட்சிகளின் கூட்டணியிலிருந்து விலகினாலும் மீண்டும் தற்போது தோழமை கட்சியாக அங்கீகரிப்பட்டுள்ளதாக Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பாரிசானில் மற்ற கட்சிகள் இணைவதால் ம.இ.காவுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் ம.இ.காவுடனான் ஒப்பந்தங்களில் மாற்றம் இருக்காது என தாம் நம்புவதாக Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *