பாரிசானில் மக்கள் சக்தி! ம.இ.கா எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்! தனேந்திரன்!

top-news
FREE WEBSITE AD

னவரி 23,

பாரிசான் கூட்டணியில் மக்கள் சக்தி, பிபிபி, கிம்மா ஆகிய கட்சிகள் இணைவதை ம.இ.கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் சக்தி கட்சியின் தலைவர் தனேந்திரன் வலியுறுத்தி்ார். கடந்த வாரம் பிபிபி கட்சியைம் பாரிசானின் உறுப்புக் கட்சியாக ஏற்றுக்கொண்டதாகத் துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Zahid Hamidi அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு ம.இ.காவிடமிருந்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ம.இ.காவின் தலைமை பாரிசானில் புதிய கட்சிகள் இணைவதை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருப்பதைத் தனேந்திரன் சுட்டிக்காட்டினார்.

க்கள் கட்சி பாரிசானில் இணைவதற்காகக் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கிறது. பாரிசானுக்கு விசுவாசமாக இருக்கும் பல கட்சிகள் பாரிசானில் இணைய விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் பாரிசான் கூட்டணியில் 14க்கும் மேலான கட்சிகள் உறுப்புக் கட்சிகளாகவும் ஆதரவுக் கட்சிகளாகவும் இருந்துள்ளதை மக்கள் சக்தியின் தனேந்திரன் நினைவூட்டினார். பாரிசானில் மக்கள் சக்தி இணைவதால் அதன் உறுப்புக் கட்சிகளின் அரசியல் வாய்ப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாதூ என்பதையும் ம.இ.கா உணர வேண்டும். நிச்சயமாகப் பாரிசானுக்குப் பெரும்பான்மை வெற்றியை அதன் உறுப்புக் கட்சிகள் பெற்று தரும் என மக்கள் சக்தி தனேந்திரன் நம்பிக்கை அளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *