17 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

- Sangeetha K Loganathan
- 26 Jan, 2025
ஜனவரி 26,
இன்று காலை 17 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 6 வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் காயமடைந்ததுடன் 63 வயது பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
காலை 9.15 மணியளவில் சண்டாகானில் உள்ள Jalan Sibuga சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதாக அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக Sandakan மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Nidzam தெரிவித்தார்.
பேருந்தில் இருந்த 13 பெரியவர்களும் 4 குழந்தைகளும் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் சீனா நாட்டைச் சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் காயமடைந்ததாகவும் பேருந்து ஓட்டுநர் பலத்த காயத்திற்குள்ளானதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவரும் Sandakan அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Mohd Nidzam தெரிவித்தார்.
Sebuah bas pelancong yang membawa 17 penumpang terlibat dalam kemalangan di Jalan Sibuga, Sandakan. Enam pelancong warga China dan pemandu bas berusia 63 tahun cedera. Semua mangsa kini menerima rawatan di Hospital Sandakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *