ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி!
- THINAGAREN SANGGAREN
- 24 Apr, 2026
ஏப்ரல் 24,
நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் திடீரென ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு அச்சிறுவன் நீரில் மூழ்கியதாகவும், நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்து தோல்வி அடைந்த பின்னர் மீட்பு ஆணையத்திற்குத் தகவல் தெரிவித்ததாகவும் BAU மாவட்டக் காவல் ஆணையர் Haide Rahman தெரிவித்தார்.
மாலை 4.40 மணிக்கு Kampung Segubang ஆற்றில் தேடுதல் பணியைத் தொடங்கியதாகவும் மாலை 5.30 மணிக்கு நீரில் மூழ்கிய சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் BAU மாவட்டக் காவல் ஆணையர் Haide Rahman தெரிவித்தார். சிறுவனின் உடலில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லாததால் இது ஒரு விபத்து என கருதப்படுவதாக BAU மாவட்டக் காவல் ஆணையர் Haide Rahman தெரிவித்தார். தற்போதைய சூழலில் சிறுவர்கள் நீர் பகுதிகளில் செயல்படுவதைத் தவிர்க்கும்படியும் முறையான பாதுகாப்புகளை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



