தீபாவளிச் சந்தைகளுக்கானக் கட்டணங்கள் குறைப்பு! – HANNAH YEOH!
- THINAGAREN SANGGAREN
- 23 Sep, 2026
செப்டம்பர் 23,
கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் கீழுள்ள தீபாவளிச் சந்தைகளுக்கானக் கட்டணத்தை RM2,626 இலிருந்து RM400-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என பிரதமர் துறையின் கூட்டரவு வளாக அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். கடந்த காலங்களில் RM2,626 ரிங்கிட் வசூலிக்கப்பட்டாலும் தற்போது கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளதால் இந்த கட்டணத்தைக் குறைத்திருப்பதாக Hannah Yeoh தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 21 நாள்கள் மட்டுமே இருந்த தீபாவளி சந்தை, இவ்வாண்டு அக்தோபர் 9 முதல் நவம்பர் 7 வரையில் தொடர்ச்சியாக 30 நாள்களுக்குச் செயல்படும் என Hannah Yeoh தெரிவித்தார். காலை 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் தீபாவளிச் சந்தைகள் செயல்படும் என்றும் மொத்தம் 172 வணிகத் தலங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக Hannah Yeoh தெரிவித்தார்.
Brickfields, Tun Sambanthan சாலையில் 122 வணிகத் தலங்களும், Masjid India Jalan Bunus சாலையில் 50 வணிகத் தலங்களும் அமைக்கப்படும் என Hannah Yeoh தெரிவித்தார். தீபாவளி சந்தையின் போது போக்குவரத்துத் துறையினர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என்றும் Hannah Yeoh தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



