பதிவு செய்யப்படாத மருத்துவமனை வழக்கு: முன்னாள் PH வேட்பாளர், மனைவி மீது குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஆக. 6-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் (PRN) ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹாராப்பான் (PH) சார்பில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் டாக்டர் அசிசுல் ஹக்கீம் மஹ்டி மற்றும் அவரது மனைவி நூர் அமீரா ரஹ்மத் ஆகியோர், பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனையை நடத்தி வந்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

35 வயதுடைய டாக்டர் அசிசுல் ஹக்கீம் மற்றும் நூர் அமீரா ரஹ்மத் ஆகியோர் தங்களது நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களுடன், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனமும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி ஷாருல் ரிஸால் மஜிட் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, இருவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என தெரிவித்தனர்.

குற்றப்பத்திரிகையின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனம், 1998-ஆம் ஆண்டு தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் (சட்டம் 586) பிரிவு 27-இன் கீழ் பதிவு செய்யாமல் தனியார் மருத்துவ சேவையை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *