இந்திய இளைஞர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட வேண்டும்! – துணை அமைச்சர் யுனேஸ்வேரன்
- Thinagaren Sanggaren
- 08 Jan, 2026
ஜனவரி 8,
மலேசியாவில் உள்ள அனைத்து சமூகத்தின் நம்பிக்கைகளாக அதன் இளைஞர்கள் இருக்கும் நிலையில் நம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாக இருப்பதாக ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் Yuneswaran Ramaraj வலியுறுத்தினார். ஜொகூர் மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் 25 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தலைமையேற்றதில் மனநிறைவுடன் இருப்பதாகவும் இளைஞர்களின் தலைமைத்துவத்தில் குறிப்பாக இந்திய இளைஞர்களின் தலைமைத்துவப் பண்பு மேன்மை அடைந்திருப்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் துணை அமைச்சரும் செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான Yuneswaran Ramaraj தெரிவித்தார்.
நம் சமூகத்தில் குறிப்பாக B40 எனும் வறுமையில் வாடும் இந்தியர்களின் வாழ்வாதாரம் மேம்பட நம் இளைஞர்களின் பங்களிப்பும் அவர்களின் சமூக அக்கறையும் குறிப்பிடத்தக்க அளவு மேன்மையடைய தாம் வழிவகுப்பதாகத் துணை அமைச்சர் Yuneswaran நம்பிக்கை அளித்தார். அனுபவமற்ற இளைஞர்களின் கருத்துகளையும் மடானி அரசு தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய புதிய சிந்தனைகளும் மாற்று செயல்பாடுகளையும் முன்னெடுக்க விரும்பும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என துணை அமைச்சரும் செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான Yuneswaran Ramaraj கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



