SPRM அதிகாரி துப்பாக்கி காட்டியதாகக் கூறப்படும் சம்பவம்: இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை- சிலாங்கூர் காவல்படை
- Tamil Malar (Reporter)
- 15 Dec, 2025
ஷா ஆலாம், டிச. 15-
பூச்சோங்கில் உள்ள வீட்டில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை, கைது நடவடிக்கையின் போது, ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) அதிகாரி துப்பாக்கியைக் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் எந்த சாட்சியமோ ஆதாரமோ இதுவரை கிடைக்கவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் காவல்படைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் (IPD) கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஒரு பெண்மணியிடமிருந்து புகார் பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தப் பெண்மணி கைதான வணிகர் ஆல்பர்ட் டெயின் மனைவி ஆவார்.
புகாரில், SPRM அமலாக்கக் குழுவினர் வீட்டைச் சோதனையிட்டு, கணவரை SPRM சட்டம் 2009இன் பிரிவு 16(a)இன் கீழ் கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், சோதனையின் போது SPRM உறுப்பினர்கள் தம்மீதும் கணவர்மீதும் துப்பாக்கியைக் காட்டியதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸாருக்கு இதுவரை எந்த குறிப்பிடத்தக்க சாட்சியமோ ஆதாரமோ கிடைக்கவில்லை என்று டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



