பட்டறையில் தீ! 4 வாகனங்கள் கருகியது!
- THINAGAREN SANGGAREN
- 22 Mar, 2026
மார்ச் 22
கூலாயில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சொகுசு கார்கள் உட்பட 4 வாகனங்கள் தீயில் கருகியது. நேற்று இரவு 10.53 மணிக்கு தீயணைப்பு துறைக்கு பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பை பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக kulai மாவட்ட தீயணைப்பு ஆணையர் Syafiq Rejab தெரிவித்தார்.
பட்டறையில் இருந்த Mitsubishi Emerqud சொகுசு கார், 2 PROTON PERDANA, ஒரு வேன் என மொத்தம் 4 வாகனங்கள் முழுமையாக தீயில் கருகியதாகவும் பட்டறை 90% தீயில் கருகியதாகவும் Syafiq Rejab தெரிவித்தார். இரவு 11.22 மணிக்குத் தீ முழுமையாக அமைக்கப்பட்ட நிலையில் எந்த ஊர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என Syafiq Rejab உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



