Bentong சுங்கச்சாவடியில் 2 லாரிகளும் 3 கார்கள் விபத்து!

top-news
FREE WEBSITE AD

னவரி 15,

ட்டுப்பாட்டை இழந்த 2 லாரிகளும் பெந்தோங் சுங்கச் சாவடியில் நின்றுக்கொண்டிருந்த 3 வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானதில் 5 ஆடவர்கள் காயமடைந்தனர். நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு விபத்துக் குறித்து சுங்கச்சாவடி ஊழியர் தகவல் தெரிவித்ததும் மீட்புப் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பெந்தோங் மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

விபத்தின் போது இரு treler லாரிகளிலும் தீ ஏற்பட்டதாகவும் மற்ற வாகனங்களுக்குத் தீ பரவாமல் தீயணைப்பு அதிகாரிகள் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட 5 ஓட்டுநர்களும் சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மாலை 4 மணிக்கு நடவடிக்கை முழுமையாக நிறைவுற்றதாகவும் நெடுஞ்சாலை இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையின் விசாரித்து வருவதாகப் பெந்தோங் மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *