பாஸ் கட்சி தனித்து போவது அவர்கள் விருப்பம் - அஹ்மத் ஃபைசால் அஸுமு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 1:

பாஸ் கட்சி தனித்துப் போக விரும்பினால் போகட்டும். அது அவர்களின் விருப்பம்.  அவர்களுக்குச் சுதந்திரம்  இருக்கிறது என்று பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் ஃபைசால் அஸுமு தெரிவித்துள்ளார்.

மலாய் சமூகத்தின் நலன் மற்றும் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, பாஸ் கட்சி தனது சொந்த திசையைத் தீர்மானிப்பது அதன் கையில்தான் உள்ளது என்றும் ஃபைசால் கூறினார்.

அதுதான் பாஸ் கட்சியின் நிலைப்பாடு என்றால், அது அவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றால், மலாய் ஒற்றுமைக்கு பங்களிக்கும் என்று அவர்கள் நம்பினால், நாம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. அந்தப் பாதையில் அவர்கள் செல்வதைத் தடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், வேறு பலர் தொடர்ந்து தங்களுடன் நிற்பார்கள் என்று தாம் நம்புவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரிகாத்தான் நேஷனலுக்குள் கட்சி அமைப்பின் பலம் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தனது கட்சியும் பெர்சத்து கட்சியும் எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாகப் போட்டியிட வேண்டும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி நேற்று பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *