ஹம்சா நீக்கம் முறையல்ல- முகமது யாட்சில்

top-news

கோலாலம்பூர், மார்ச் 18-

பெர்சத்து (BERSATU) கட்சி தற்போது ஆபத்தான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என அதன் முன்னாள் தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியில் வெளிப்படைத்தன்மை குறைந்து, அரசியலமைப்பு புறக்கணிக்கப்படுகின்றது என்றும், தீர்மானங்கள் நிலையான அடிப்படையின்றி எடுக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னாள் உயர் தலைமை கவுன்சில் (MPT) உறுப்பினரான டாக்டர் முகமது யாட்சில் யாகூப், சமீபத்தில் கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறினார். குறிப்பாக, டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் நீக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் கவலை வெளியிட்டார்.

“மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். கட்சி உறுப்பினர்களும் உண்மையை புரிந்துகொள்கிறார்கள். தலைமை தொடர்ந்து உண்மையை மறுத்து பலவீனமான முடிவுகளை பாதுகாத்தால், மக்களின் நம்பிக்கை மெதுவாக சிதைந்து விடும்,” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

ஹம்சா சைனுடின், லாருட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்கிய நடைமுறை நீதியற்றதாக இருந்ததுடன், அடிப்படை நியாயம் மற்றும் நேர்மையின் கொள்கைகளை பின்பற்றத் தவறியதைக் காட்டுகிறது எனவும் டாக்டர் யாட்சில் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *