பெர்சத்துவிலிருந்து விலகி அம்னோவுக்குத் தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள்! எதிர்கட்சிக்கு அம்னோ அழைப்பு!

top-news
FREE WEBSITE AD

மே 9,

பாரம்பரியமிக்க மலாய் அரசியல் கட்சியான அம்னோவிலிருந்து விலகியவர்களை RUMAH BANGSA திட்டத்தின் கீழ் மீண்டும் அம்னோவுக்குள் இணைத்துக் கொள்ளும் முயற்சி வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். இதுவரையில் 17,000 பேருக்கும் மேலானவர்கள் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பதாகவும் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். குறிப்பாகக் கடந்த காலங்களில் அம்னோவிலிருந்து விலகி, பெர்சத்துவுக்குச் சென்ற பலரும் மீண்டும் அம்னோவில் இணைந்து வருவதாகவும் இன்னும் இணையாதவர்கள் உங்கள் சொந்த கட்சிக்குத் திரும்புங்கள் என்றும் Datuk Dr Asyraf Wajdi Dusuki அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாகத் தனது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெர்சத்து தகுதி நீக்கம் செய்திருந்தது. அவர்களில்
Ketereh  நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Khlir Mohd Nor, ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் Abdul Khalib Abdullah, ஹுலூ திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Rosol Wahid, லுமூட் நாடாளுமன்ற உறுப்பினர் Nordin Ahmad Ismail , தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Ikmal Hisham Abdul Aziz ஆகிய ஐவரும் அம்னோவிலிருந்து விலகி பெர்சத்துவில் இணைந்தவர்கள் என்பதால் அவர்கள் மீண்டும் அம்னோவுக்குத் திரும்பும் வாய்ப்பு இப்போது இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று பெர்சத்துவின்
Suka Menanti சட்டமன்ற உறுப்பினர் Dzowahir Ab Ghani, Sungai Tiang சட்டமன்ற உறுப்பினர் Abdul Razak Khamis ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது பெர்சத்து தலைமை. அவர்களுக்கு ஆதரவளித்த Kulim Bandar Baharu நாடாளுமன்ற உறுப்பினர் Roslan Hashim, கங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் Zakri Hassan, Sabak Bernam நாடாளுமன்ற உறுப்பினர் Kalam Salan ஆகிய மூவருக்கும் பெர்சத்துவின் தலைமைக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்சத்துவின் இந்த கண்டிப்பான நடவடிக்கையால் பெர்சத்துவின் நாடாளுமன்றச் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பெர்சத்து தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தாய் கட்சியான அம்னோவுக்குத் திரும்பும் எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *