பெர்சத்துவுக்குப் பாஸ் கட்சியின் ஆதரவு தேவை இல்லை! AZMIN ALI பதிலடி!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 28,

ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சியை விடவும் வலுவான ஆதரவாளர்கள் பெர்சத்து கட்சியில் இருப்பதால் பாஸ் கட்சியின் ஆதரவு பிரச்சாரம் இல்லாமலே பெர்சத்து தேர்தலை எதிர்நோக்கும் என பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Azmin Ali பாஸ் கட்சிக்குப் பதிலடி கொடுத்தார். ஒரே கூட்டணியில் இருந்தாலும் பெர்சத்துவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்மையால் பாஸ் கட்சியின் தலைமை முழுமையாகப் பெர்சத்துவிடமிருந்து விலகி இருப்பது தேர்தல் அரசியலுக்கு நல்லது அல்ல என Datuk Seri Azmin Ali பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang-க்கு வலியுறுத்தினார்.

பெரிக்காத்தான் சின்னத்தில் பெர்சத்து போட்டியிடும் என்பதில் பெர்சத்து உறுதியாக இருக்கிறது. அதற்கு பெரிக்காத்தான் தலைமை ஒத்துழைக்க வேண்டும். பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமையைப் பொறுப்பேற்றிருக்கும் பாஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சரி சமமாக அங்கீகரிக்க வேண்டும் என Datuk Seri Azmin Ali பாஸ் கட்சிக்கு நினைவூட்டினார். தேர்தலுக்குப் பின்னர்  எரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலானச் சர்ச்சைகல் சுமூகமாகத் தீர்க்கப்படும் என Datuk Seri Azmin Ali நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *