BERSATU இல்லாத PERIKATAN! பாஸ் இளைஞர் பிரிவு தயார்!

top-news
FREE WEBSITE AD

மே 23,

BERSATU கட்சியுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய பாஸ் கட்சி தலைவர் தான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருப்பது சரியான நேரத்தில் சரியாகத் தெரிவித்துள்ளார் என்பதால் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு BERSATU இல்லாத PERIKATAN-ஐ வழிநடத்த தயாராக இருப்பதாக அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவருமான Afnan Hamimi தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் வலுவான அடித்தளம் இளைஞர்கள் என்றும் BERSATU விடம் இளைஞர்கள் இல்லை என்பதால் பாஸ் கட்சியின் இளைஞர்கள் பொதுத் தேர்தலுக்கும் மாநிலத் தேர்தலுக்கும் தயாராகும்படி Afnan Hamimi வலியுறுத்தினார். எதிர்கட்சியாகப் பாஸ் கட்சி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பின்னோக்கி நாம் சிந்திக்க வேண்டாம். கூட்டணி இல்லாமலே பாஸ் கட்சி தேர்தலை எதிர் நோக்கி உள்ளது, அதேபோல் இப்போதும் எதிர்நோக்குவோம் என Afnan Hamimi தெரிவித்தார்.


உட்கட்சியில் சிக்கல் இருப்பதால் சகித்துக்கொண்டு நாம் அரசியல் செய்தாலும், முழுமையாக நம்மால் அரசியலில் இயங்க முடியாது என்பதால் பாஸ் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்குப் பாஸ் கட்சியின் இளைஞர்கள் ஆதரவாக இருப்போம் என அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவருமான Afnan Hamimi தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *