மலேசியாவில் அதிகரிக்கும் உடல் பருமன் குழந்தைகள்!
- Shan Siva
- 04 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 4: உலக உடல் பருமன் கூட்டமைப்பின் அண்மைய
ஆண்டு அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஐந்து முதல்
19 வயது வரையிலான சுமார் 28 லட்சத்து 50 ஆயிரம் மலேசியக் குழந்தைகள் உடல் பருமனான
குழந்தைகளாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உடல் பருமன் அட்லஸ் 2026,
ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான 866,000 குழந்தைகள் உடல் பருமனாகவும், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 19 லட்சம் குழந்தைகள் உடல் பருமனாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் அதிக
எடை அல்லது பருமனான பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 305,000 குழந்தைகள் உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப
அறிகுறிகளோடு இருப்பார்கள் என்றும், 382,000 பேர் உடல் பருமனால் ஏற்படும் இருதய நோய்களுக்கு ஆளாக
நேரிடும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், உலகளவில், 2040 ஆம் ஆண்டுக்குள் 507 மில்லியன் குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



