குழந்தைகளின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் “Beyond Label” நூல் வெளியீடு! – கஸ்தூரி ராயன்
- THINAGAREN SANGGAREN
- 23 Jul, 2026
ஆட்டிசம் குழந்தைகளைப் பெற்றோர்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு எழுத்தாளரும் சமூக ஆர்வளருமான கஸ்தூரி ராயன் எழுதிய Beyond Label எனும் நூல் கிள்ளானில் வெளியீடுக் கண்டுள்ளது. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், ஸ்ரீ முருகன் நிலையத்தின் சுரேன் கந்தா, Kiwanis Malaysia Academy தலைவர் Dato' Fatimah Saad, Kiwanis Club of Taman Tun Dr. Ismail தலைவர் Desiree Kaur, ஆகிய முக்கிய பிரமுகர்கள் இந்நூல் வெளியீட்டில் கலந்து கொண்டனர்.
ஆட்டிசம்
என்பதைக் குறைபாடாக அல்லாமல் குழந்தைகளுக்குள் இருக்கும் தனித்துவத்தை அடையாளம்
கண்டு பெற்றோர்கள் மட்டுமல்லாது சமூகமும் எவ்வாறு அவர்களைக் கையாள வேண்டும் என்பதை
இந்த Beyond Label எனும் நூல்
உணர்வுப்பூர்வமாகவும் அறிவியல்பூர்வமாக உணர்த்துவதாக எழுத்தாளர் கஸ்தூரி ராயன்
தெரிவித்தார். இந்த நூல், வணிக நோக்கத்திற்காக அல்லாமல், இந்த நூலின் மூலமாகப்
பெறப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும் ஆட்டிசம் போன்ற குழந்தைகளின் வாழ்வுக்காக மட்டுமே
பயன்படுத்தப்படும் என நூலாசிரியர் கஸ்தூரி ராயன் உறுதியளித்தார்.
கல்வியாளராக
மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலையும் கடந்து சமூகத்தின் உயரிய அங்கீகாரத்தைப்
பெற இந்த நூல் வழிவகுக்கும் என்றும் உங்கள் குழந்தைகள் சுமையானவர்கள் அல்ல, அவர்கள்
நம் தலைமுறையின் அடையாளம் என Beyond Label நூலின் ஆசிரியர் கஸ்தூரி
ராயன் தெரிவித்தார். இந்த நூலின் மூலமாகப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகத்தினர்
அனைவரும் நம் சிறப்புக் குணமுடைய குழந்தைகளுடனானச் சிந்தனையையும் அவர்களை அணுகும்
முறைகளையும் மேலும் மேம்படுத்துவார்கள் என கஸ்தூரி ராயன் நம்பிக்கை
தெரிவித்தார்.
முறையான வாய்ப்புகளும் சமூகத்தின் ஆதரவும் கிடைத்தால் எந்தவொரு தனி நபரும்
சிறந்து விளங்க முடியும். அப்படியான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தினாலும் சமூகத்தின்
ஆதரவு மிக முக்கியம் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ்
வலியுறுத்தினார்.
அற்புதமானக் குழந்தைகளுக்கு அருமையான பெற்றோர்களாக நாம் திகழ்வதற்கு Beyond Label நூல் வழிகாட்டியாக அமையும் என நூலாசிரியர் கஸ்தூரி ராயன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



