RM 6 லட்சம் மதிப்பிலான தாது பொருள்களைப் படகில் கடத்திய மூவர் கைது!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

சட்டவிரோதமாக மலேசியாவிலிருந்து தாது பொருள்களைக் கடத்திய மூவரைக் கடல்சார் பாதுகாப்பு அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகத்திற்குரிய படகு அதிகாலை 3 மணிக்கு BATU PAHAT கடல் வழியாகப் பயணித்ததைக் கண்டதும் ரோந்து பணியில் இருந்த கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்ட போது அரிய வகை கனிமங்களில் ஒன்றான தாது பொருள்களைப் பறிமுதல் செய்ததாக ஜொகூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையர் Mohammad Zaini Zainal தெரிவித்தார்.

படகிலிருந்து 120 மூட்டைகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் இதன் எடை சுமார் 6000 கிலோ என்றும் இதன் மதிப்பு சுமார் RM 6 லட்சம் ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த மூவரில் ஒரு மலேசியர் என்றும் இருவர் இந்தோனேசியர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக BATU PAHAT காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையர் Mohammad Zaini Zainal தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *