தபோங் ஹாஜியில் முறைகேடு நிரூபிக்கப்பட்டால் சமரசம் இல்லை – அகமட் ஜாஹிட் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக. 6-

 தபோங் ஹாஜி (TH) நிர்வாகத்தில் நம்பிக்கை மோசடி, முறைகேடு அல்லது தவறான நிர்வாகத்தில் யாரேனும் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று துணைப் பிரதமரும் பாரிசான் நேஷனல் (BN) தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

தபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இது தொடர்பாக பேசிய அவர், அரசு அமைப்பு அல்லது சட்டப்பூர்வ வாரியத்தின் நிர்வாகக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு, முறைகேடு, நம்பிக்கை மோசடி அல்லது தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டதாக யாரேனும் அல்லது குழுவொன்று நிரூபிக்கப்பட்டால், அவர்கள் அதற்கான சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்.

"எதிர்மறையான செயல்களில் யாரேனும் ஈடுபட்டிருந்தால், அவர்களுடன் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்பதே பாரிசான் நேஷனல் மற்றும் அம்னோவின் உறுதியான நிலைப்பாடாகும்," என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *