சம்பா நாட்டு இளவரசி வரலாற்று நூல்! இளைஞர்கள் விவாதம்!
- Thinagaren Sanggaren
- 20 Aug, 2025
ஆகஸ்ட் 20,
மலேசிய எழுத்தாளர் மு.மதியழகன் எழுதி வெளியிட்டுள்ள “சம்பா நாட்டு இளவரசி” எனும் வரலாற்று நூலின் வரலாற்று குறிப்புகள் தொடர்பாக விவாதங்களும் விளக்கங்களும் எதிர்வரும் செப்டம்பர் 5 மாலை 2 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறுகிறது. தென்கிழக்காசியாவின் முக்கிய வரலாறுகள் குறித்து இந்த நூல் எழுதப்பட்டிருப்பதால் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இந்த நூல் புதிய வரலாற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பதாகக் கருத்துகள் பரவுகிறது.
நாள் : 5.9.2025
நேரம் : மாலை 2 மணிக்கு
இடம்: லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபம், சிரம்பான்
மலேசியாவின் மூத்த கவிஞரும் எழுத்தாளருமான திரு கருணாகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ராகா வானொலி புகழ் அறிவிப்பாளரும் திரைக்கலைஞருமான உதயா தலைமையேற்கிறார். “சம்பா நாட்டு இளவரசி” எனும் வரலாற்று நூலை வாசித்தது குறித்தான தங்களின் அனுபவங்களை இளம் வாசகர்களான திவாகரன், கீர்த்தனா, டிலாஷினி, ஹர்விந்த ஆகியோர் விவாதங்களை முன்வைக்கவுள்ளனர், இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் வாசகர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்று பயன்பெறும்படியும் ஏற்பாட்டுக் குழுவிடம் மேல் விவரங்களைப் பெற : 011 1078 2750 (திரு.கருணாகரன்) / 0126387901 (திரு.மு.மதியழகன்) ஆகியோரை அணுகலாம்.
செய்தி- தினகரன் சங்கரன்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



