அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்த சிறுவன் மரணம்
- Surendran Sumdraraj
- 01 Jun, 2026
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 1-
சிலாங்கூர், தாமான் கஹாயா அம்பாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 13ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஒன்பது வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் நடந்தபோது சிறுவன் குடியிருப்பில் தனியாக இருந்ததாக அம்பாங் ஜெயா காவல் துறைத் தலைவர் அஸாம் இஸ்மாயில் கூறினார்.
மாலை சுமார் 7.45 மணியளவில், ஒரு சிறுவன் கீழே விழுந்து சுயநினைவின்றி இருப்பதாக ஒரு பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்ததாக அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுவன் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்ததும், அம்பாங் மருத்துவமனையின் மருத்துவ உதவியாளர் இரவு 7.42 மணியளவில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்துவிட்டதாக அறிவித்ததும் தெரியவந்துள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஐந்து பேரின் வாக்குமூலங்களை காவல்துறை பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
குழந்தைகளைப் புறக்கணித்தல், கைவிடுதல் அல்லது துன்புறுத்துதல் தொடர்பான குழந்தை சட்டம் 2001-இன் பிரிவு 31(1)-இன் கீழ் காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



